NEW

பிரபல றக்பி விளையாட்டு வீரர் வசிம் தாஜூதீனின் கொலையுடன் சம்பந்தப்பட்ட தகவல்களை மறைத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில், நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி சுமித் சம்பிக்க பெரேராவை, குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர். 

தாஜூதீன் விவகாரம்: முன்னாள் ஓ.ஐ.சி.கைது

Read More


டிஸ்னியின் புதிய வடிலிலாக ஜங்கல் புக் (The Jungle Book) திரைப்படம் திரையிடப்பட்டு முதல் வாரத்திலேயே 103.6 மில்லியன் டொலர் வசூலை குவித்து சாதனை படைத்துள்ளது. இது இரண்டாவது வசூல் சாதனையாகும்.

2015 ஆம் ஆண்டில் வெளியான பியூரியஸ் 7 (Furious 7) 147.2 மில்லியன் அமெரிக்க டொலர் வசூலை பெற்று சாதனை படைத்தது. இத்திரைப்படத்தினூடாக அமெரிக்காவுக்கு வெளியே மற்றும் கனடா  ஆகிய நாடுகளில் 136.1 அமெரிக்க டொலர் வசூலை எதிர்பார்த்ததாக அந்நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர். 

திரைப்படம் வெளியாகிய முதல் வார இறுதி நாட்களில் மட்டும் 20.2 மில்லியன் டொலர் வசூலாகியுள்ளது. கார்டூன் திரைப்படங்களாக வெளியான அலிஸ் இன் வொன்டர் லேண்ட், சின்டரெல்ல, மற்றும் ஸ்லிப்பிங் பியூட்டியை தழுவி எடுக்கப்பட்ட மெல்பிஸன்ட் ஆகிய திரைப்படங்களை நிஜ மனிதர்களை கொண்டு திரைப்படமாக்கப்பட்டமை மக்களிடையே  மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜங்கல் புக் திரைப்படம் வசூலில் அமோக சாதனை!

Read More


மே மாதம் 2ம் திகதி முதல் அமுலாகும் வகையில் பெறுமதி சேர் வரி (VAT) 15% ஆக அதிகரிக்கப்பட உள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. 

​முன்னதாக, ஏப்ரல் மாதம் 01ம் திகதி முதல் 15% ஆக அதிகரிக்கப்பட வெட் வரி மறு அறிவித்தல் வரும் வரை இடைநிறுத்தப்பட்டுவதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் கல்யாணி தஹநாயக்க ஏப்ரல் 01ம் திகதியன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

அதன்படி மறு அறிவித்தல் வரும் வரை ஏற்கனவே இருந்தது போன்று 11% ஆக பெறுமதி சேர் வரி இருக்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. 

இந்நிலையில் இடைநிறுத்தப்பட்டிருந்த வெட் வரி அதிகரிப்பு மீண்டும் மே மாதம் 2ம் திகதி முதல் 15% நடைமுறைக்கு வருமென்று நிதியமைச்சு தெரிவித்துள்ளது. 

இந்த அதிகரிப்பானது சுகாதார துறை மற்றும் தொடர்பாடல் துறைகளுக்கும் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அண்மையில் பாராளுமன்றில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க பெறுமதி சேர் வரியை 15 வீதமாக அதிகரிப்பதாக கூறியிருந்தார். 

(அத தெரண தமிழ்)

இடை நிறுத்தப்பட்ட வரி அதிகரிப்பு மீண்டும் அமுலுக்கு வருகிறது

Read More


வடக்கில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள 65 ஆயிரம் வீட்டுத் திட்டத்தின் மூலம் வீடுகளைப் பெற்றுக்கொள்ளும் பயனாளிகளின் பெயர் விபரங்கள் இணையத்தளம் ஊடாக பகிரப்பட்டுள்ளன. 

இந்த பெயர் விபரங்கள் மீள்குடியேற்றம், புனர்நிர்மாணம் மற்றும் இந்துமத விவகார அமைச்சின் இணையத்தளத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதன் முதல் கட்டமாக யாழ். மாவட்டத்தின் சாவகச்சேரி, ஊர்காவற்றுறை, மருதன்கேணி மற்றும் சண்டிலிப்பாய் பிரதேசங்களுக்கான வீட்டுப் பயனாளிகளின் பெயர் விபரங்கள் இணையத்தளத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 

65 ஆயிரம் வீடுகளுக்கு உரித்துடைய பயனாளிகளை தெரிவு செய்யும் பணிகள் பிரதேச செயலக மட்டத்தில் அந்தந்த மாவட்ட செயலகங்களினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வீடமைப்புத் திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ள பயனாளிகள் தொடர்பிலான மீளாய்வுக்காகவும், உறுதிப்படுத்தலுக்காகவும், அரசாங்கத்தின் வெளிப்படைத் தன்மையை எடுத்துக் காட்டுவதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டது.


65 ஆயிரம் வீட்டுத் திட்ட பயனாளர்களின் பெயர் விபரங்கள் இணையத்தளத்தில்!

Read Moreபாரிய மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடம் வாக்குமூலத் தைப் பெறும் நடவடிக்கைகள் இன்று வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

அரச தொலைக்காட்சி ஒன்றுக்கு கட்டணம் வழங்காமை தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக் காக நேற்று மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆணைக்குழு அழைப்பு விடுத்தி ருந்தது.

எது எவ்வாறு இருப்பினும் அத்தியாவசிய ஆவணங்கள் சில வற்றை பிரதிவாதி தரப்பிற்கு அனுப்பி வைப்பதில் தாமதம் ஏற்பட்டமையால் சாட்சி விசாரணை களை இன்று வரை ஒத்திவைக்க தீர்மானித்துள்ளதாக பாரிய மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர்

லெசில் டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ரத்னா லங்கா நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படும் மோசடிகள் தொடர்பில் வாக்குமூலத்தை பதிவு செய்ய எவன்காட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஷங்க சேனாதிபதி இன்றைய தினம் ஆணைக்குழுவுக்கு அழைக்கப் பட்டுள்ளார்.

மஹிந்தவிடம் வாக்குமூலம் பெறுதல் ஒத்திவைப்பு

Read Moreபிற்பகல் 2 மணிக்கு நிதியமைச்சரினால் சபையில் சமர்ப்பிப்பு

எட்டாவது பாராளுமன்றத்தின் முதலாவது வரவுசெலவுத்திட்டம் இன்று பிற்பகல் 2 மணிக்கு நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க வினால் பாராளுமன்றத்தில் சமர்க்கப்படு கிறது. ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்த நல்லாட்சி அரசாங்கத்தின் இந்த முதலாவது வரவுசெலவுத்திட்டம் குறித்து ஒருபோது மில்லாத அளவு மக்கள் பாரிய எதிர்பார்ப் புகளுடன் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு புதியதொரு ஆரம்பமாக அமையவிருக்கும் இந்த வரவுசெலவுத்திட்டத்தில், மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைப்பது மற்றும் நாட்டின் அபிவிருத்தி ஆகிய இரண்டு முக்கிய விடயங்கள் கூடுதல் கவனம் செலுத்தப் பட்டிருப்பதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

வரவுசெலவுத்திட்டம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, சர்வதேச வர்த்தக விவகார அமைச்சர் மலிக் சமரவிக்ரம, நிதியமைச்சின் செயலாளர், மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜூனா மகேந்திரன் ஆகியோர் கலந்துரையாடி யிருந்தனர்.

வரவுசெலவுத்திட்டத்தை அனுமதிப்பது தொடர்பான விசேட அமைச்சரவைக் கூட்டம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு ஜனாதிபதி தலைமையில் நடைபெற விருப்பதாக அமைச்சரவையின் இணைப் பேச்சாளர் அமைச்சர் கயந்த கருணாதிலக கூறினார்.

புதிய அரசாங்கத்தால் இன்று சமர்ப்பிக் கப்படும் வரவுசெலவுத்திட்டம் கடந்தகாலத்தில் பாதிக்கப்பட்ட மக் களுக்கு 75 வீதம் முதல் 80 வீதம் வரையான நிவாரணங்களை வழங்கு வதாக அமைவதுடன், கடந்த கால வரவுசெலவுத் திட்டங்களைவிட 5 மடங்கு அதிகமான நிவாரணங்களை மக்களுக்கு வழங்குவதாக அமையும் என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

இவ்வரவுசெலவுத்திட்டம் தமக்கான வரவுசெலவுத்திட்டம் என்பதை ஒவ்வொருவரும் உணரும் வகையில் இருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டி யுள்ளார்.

2016 வரவுசெலவுத்திட்டத்தில் அரசாங் கத்தின் மொத்த செலவீனம் 3,138 பில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ள தோடு அரச வருமானம் 1,941 பில்லியன் களாக அமையும் என எதிர்பார்க்க ப்படுகிறது.

இது தொடர்பான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் அமைச்சரவையின் அங்கீ காரத்தின் பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் பட்டது.

அத்தியாவசியப் பொருட்கள் பத்தின் விலைகள் குறைக்கவும், வறிய மக்களை பாதிக்காத வகையில் வரி அறவீடுகளை மேற்கொள்ளவும் உத்தேசிக்கப்பட் டுள்ளது.

அத்துடன் மூலதனத்தை அடிப்ப டையாகக் கொண்டதாகவும், செலவீனத் தைவிட வருமானத்தை அதிகமாகக் கொண்டதாகவும் இம்முறை வரவு செலவுத்திட்டம் அமையும் என நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

துண்டு விழும் தொகையை 6.8 வீதமாக மட்டுப்படுத்தவும், 2017ல் இதனை 6.2 வீதமாகவும் 2020ல் 3.2 ஆகவும் குறைக்க அரசாங்கம் உத்திதேசித் துள்ளது. இம்முறை வரவுசெலவுத்திட்டம் 2016 - 2018 இடைக்காலத்தை அடிப்படை யாகக் கொண்டதாகவே அமைய உள்ளதோடு இதில் கல்வி மற்றும் சுகாதார அமைச்சுக் களுக்கு வழமை யைவிட கூடுதல் நிதி ஒதுக்கப்பட் டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சிற்கு 306.6 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதோடு கல்வி அமைச்சிற்கு 185.9 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இது 2015 நிதி ஒதுக்கீட்டைவிட 4 மடங்கு அதிக மாகும்.

சுகாதார அமைச்சிற்கு 3174 பில்லியன் ரூபாவும், பல்கலைக்கழக கல்வி மற்றும் நெடுஞ்சாலை அமைச்சிற்கு 171 பில்லியன் ரூபாவும் நிதி திட்டமிடல் அமைச்சிற்கு 107 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட் டுள்ளது.

புதிய அரசாங்கத்தின் மத்திய இடைக்கால பொருளாதார கொள்கை பிரகடனம் கடந்த 5ஆம் திகதி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிடப்பட்டது. இதனை அடிப்படையாகக் கொண்ட தாகவே 2016 வரவுசெலவுத்திட்டம் தயாரிக்கப் பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சிம்மாசன உரையை அடிப்படையாகக் கொண்டதாகவும் பிரதமரின் உரை இடம்பெற்றிருந்தது.

இம்முறை வரவுசெலவுத்திட்டத்தில் சுதந்திரக் கட்சியின் யோசனைகளும் உள்வாழ்கப்பட்டுள்ளதாக விசேட செயற்றிட்ட அமைச்சர் கலாநிதி சரத் அனுமுகம தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் யோசனைக்கு அமையவே கடந்த இடைக்கால வரவுசெலவுத் திட்டத் தினூடாக வழங்கப்பட்ட நிவாரணங்களை இம்முறையும் வழங்க திட்டமிடப்பட்டுள்ள தாகவும் அவர் குறிப்பிட்டார்.

சகல தரப்பினரையும் திருப்திப் படுத்தும் வகையில் 2016 வரவுசெலவுத் திட்டம் அமையும் என எதிர்பார்க்கப் படுகிறது.

வரவுசெலவுத்திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் நாளை முதல் ஆரம்பமாகிறது.

நாளை ஆரம் பிக்கும் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் எதிர் வரும் 2ஆம் திகதிவரை நடைபெற்று டிசம்பர் 2ஆம் திகதி விவாதம் நடத் தப்படும்.

பின்னர் மூன்றாம் திகதி முதல் 19ஆம் திகதிவரை குழுநிலை விவாதம் நடைபெற்று 19ஆம் திகதி இறுதி வாக்கெடுப்பு நடத்தப்படும்.

எம்.எஸ்.பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்

இன்று வரவுசெலவுத் திட்டம்

Read Moreநிறைவேற்று அதிகாரத்தைக் கொண்ட ஜனாதிபதி முறை எதிர்வரும் 2020 ஆம் ஆண்டிலேயே ஒழிக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

இன்று (18) பிற்பகல், ஐ.தே.க.வின் தலைமையகமான சிறிகோத்தாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

வரலாற்றில் முதன் முறையாக, பதவியில் இருக்கும்போதே தனது அதிகாரங்களை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எனும் வரலாற்று சிறப்புமிக்க சந்தர்ப்பம் இதுவாகும் என அவர் தெரிவித்தார்.

தற்போது பதவி வகிக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக் காலம் எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு ஜனவரி 09 ஆம் திகதி நிறைவடைந்ததை அடுத்தே தற்போதுள்ள ஜனாதிபதி முறை மாற்றப்படும் என அவர் சுட்டிக்காட்டினார்.

இது குறித்து பிரதமரின் தலைமையில் அமைச்சரவை உப குழு ஒன்றை நியமிப்பதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இரத்துச் செய்வதற்காக முன்வைத்த யோசனைக்கும், புதிய தேர்தல் முறைமை தொடர்பான ஜனாதிபதியின் யோசனைக்கும் அமைச்சரவை இன்று (18) அனுமதி வழங்கியுள்ளதோடு, அதற்கு ஶ்ரீ.ல.சு.கட்சியின் மத்திய செயற்குழுவும் நேற்றைய தினம் (17) அனுமதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

2020 இல் நிறைவேறும் நிறைவேற்று அதிகார ஒழிப்பு

Read Moreபடிப்படியான நடவடிக்கைகள் முன்னெடுப்பு; சி.வி., வடமாகாண மைச்சர்களிடம் ஜனாதிபதி உறுதி

தமிழ் அரசியல் கைதிகள் சகலரையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றபோதும், சகலரையும் ஒட்டுமொத்தமாக விடுவதில் அரசியல்சார்ந்த விடயங்கள் இருப்பதால் படிப்படியாக விடுதலைக்கு நடவடிக்கை எடுக்க ப்படுமென ஜனாதிபதி உறுதிமொழி வழங்கியுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று தன்னைச் சந்தித்த வடமாகாண சபை முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான மாகாணசபை அமைச் சர்களிடமே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த உறுதிமொழியை வழங்கி யுள்ளார். முதலமைச்சருடன் மாகாணசபை அமைச்சர்களான டெனீஸ்வரன், டொக்டர் பி.சத்தியலிங்கம், ரி.குருகுலராஜா மற்றும் பொ.ஐங்கரநேசன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

நேற்று முற்பகல் 11 மணிக்கு ஆரம்பமான இச்சந்திப்பு பிற்பகல் 12.45 மணிவரை நீடித்ததாக இதில் கலந்துகொண்டிருந்த வடமாகாணசபை அமைச்சர் டெனீஸ்வரன் தெரிவித்தார். வடமாகாணத்தின் அபிவிருத்தி உள்ளிட்ட பல விடயங்கள் இங்கு கலந்துரையாடப்பட்டபோதும், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும் என்ற மனதளவான நிலைப்பாட்டில் ஜனாதிபதி இருக்கின்றார்.

எனினும், ஒட்டுமொத்தமாக சகலரையும் விடுவிப்பதில் அரசியல் காரணங்கள் இருக்கின்றன என்பதை அவர் சுட்டிக்காட்டியதாக டெனீஸ்வரன் தெரி வித்தார். கைதிகளின் விடுதலைக்கான காலத்தை ஜனாதிபதி தீர்க்கமாகக் கூறியிருக்கவில்லை.

இருந்தபோதும் எதிர்வரும் திங்கட்கிழமை தமிழ் அரசியல் கைதிகளின் விபரங்கள் அடங்கிய அறிக்கையொன்று சட்டமாஅதிபர் திணைக்கள அதிகாரிகளால் தன்னிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும், அந்த அறிக்கை கிடைத்ததும் படிப்படியாக கைதிகளை விடுவிப்பது தொடர்பில் முடிவொன்றை எடுப்பதாகவும் ஜனாதிபதி தம்மிடம் கூறியதாக மாகாணசபை அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

அதேநேரம், வடமாகாணசபை உறுப் பினர்கள் நால்வரும் நேற்றையதினம் வெலிக்கடை மகசின் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை நேரில் சென்று சந்தித்து உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடுமாறு கோரி யிருந்தனர்.

எனினும், தமக்கு உறுதியான முடிவொ ன்று கிடைக்கும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை இடைநிறுத்தப் போவதில்லையென கைதிகள் தம்மிடம் கூறியதாக மாகாணசபை அமைச்சர் டெனீஸ்வரன் தெரிவித்தார்.

கைதிகள் அனைவரும் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடு விக்கப்பட வேண்டும் அல்லது அவர் களுக்கு புனர்வாழ்வளித்து விடுவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. எமது இளைஞர்கள் சிறைகளில் உண்ணா விரதமிருந்து கஷ்டப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

உண்ணாவிரதப் போராட்டத்தை நீங்கள் கைவிடுங்கள். நாம் வெளியிலிருந்து இதனை ஒரு வெகுஜனப்போராட்டமாக முன்னெடுப்போம் என்ற விடயத்தை தாம் கைதிகளிடம் கூறியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இன்றையதினம் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப் படுகிறது.

இதற்கு கிடைக்கும் பதிலைப் பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு தயாராக இருக்கின்றோம்.

தமிழ் அரசியல் கைதிகளுக்குப் பொதுமன்னிப்பே வழங்கப்பட வேண்டும். அவர்களுக்குப் பிணை வழங்குவது என்பது மீண்டும் நீண்டகாலம் நீதிமன்றங்களுக்குச் செல்வதற்கும், தண்டனை பெறுவதற்குமான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும். எனவே பொதுமன்னிப்பு வழங்க வேண்டும்.

தண்டனை வழங்கப்பட்ட 42 பேருக்கும் பொதுமன்னிப்பு வழங்கும் அதிகாரம் ஜனாதிபதியிடமே உள்ளது. ஏனைய வர்களுக்கு புனர்வாழ்வு வழங்கி விடுவிப்பதற்கான அதிகாரம் சட்டமாஅதிபர் திணைக்களத்தின் கைகளிலேயே தங்கியுள்ளது. எனவே இது விடயத்தில் ஜனாதிபதி விரைந்து நடவடிக்கையொன்றை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மகேஸ்வரன் பிரசாத்

கைதிகளை ஒரேயடியாக விடுவிப்பதில் சிக்கல்கள்

Read Moreநடிகை சமந்தா தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். விக்ரமுடன் நடித்த '10 எண்றதுக்குள்ள' படம் சமீபத்தில் வெளியானது. சு+ர்யாவுடன் '24' என்ற படத்திலும், தனுஷ் ஜோடியாக 'தங்க மகன்' என்ற படத்திலும் தற்போது நடித்துக்கொண்டு இருக்கிறார்.

விஜய்யின் 59-வது படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்துக்கொண்டு இருக்கிறார். மேலும் 4 படங்கள் கைவசம் உள்ளன. கஷ்டப்பட்டு இந்த நிலைமைக்கு உயர்ந்து இருப்பதாக சமந்தா கூறினார்.

இது குறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:- நடிகையாக வேண்டும் என்று ஆசைப்பட்டு சினிமாவுக்கு வந்த புதிதில் வாய்ப்பு தேடி அலைந்தேன். பட கம்பெனிகளில் ஏறி இறங்கினேன். பல டைரக்டர்கள் என்னுடைய நடிப்பாற்றல், கேமராவில் எனது தோற்றம் போன்றவற்றை சோதித்து பார்த்தனர். இறுதியில் நடிப்பு வரவில்லை என்று ஒதுக்கினார்கள். இது எனக்கு மனவருத்ததை ஏற்படுத்தியது.

சிலர் என்னிடம் ரேவதி போல் நடிப்பது உன் தோற்றத்துக்கு பொருத்தமாக இருக்கும் என்றனர். இதனால் ரேவதி நடித்த பழைய படங்களின் சி.டி.க்களை வாங்கிப்போய் வீட்டில் போட்டு பார்த்தேன். சிறு வயதில் இருந்தே எனக்கு ரேவதியை பிடிக்கும். எனவே அவர் எப்படி நடித்து இருக்கிறார் என்பதை சி.டி.க்களை பார்த்து உள்வாங்கி அதுமாதிரி நடித்து பயிற்சி எடுத்தேன்.

கண்ணாடி முன்னால் நின்று ரேவதி போல் நடித்தும், பேசியும் பழகினேன். அதன் பிறகு சினிமா வாய்ப்பு கிடைத்தது. இப்போது எனக்கு என்று தனி பாணியை வகுத்து நடித்து வருகிறேன். சமீபத்தில் விளம்பர படமொன்றில் ரேவதியுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிட்டியது.

மிகவும் சந்தோ'ப்பட்டேன். ஒவ்வொரு நடிகையும் இவரைப்போல் வரவேண்டும் என்று ஒரு நடிகையை முன்மாதிரியாக எடுத்துக்கொள்வார்கள். என் சினிமா வாழ்க்கையில் முன்மாதிரியாக இருப்பவர் ரேவதிதான் என்றார்.

சமந்தாவின் ரோல்மொடல் ரேவதி

Read Moreதேசிய தீபாவளி தின வைபவம் நேற்று மாலை அலரிமாளிகையில் நடந்தது இதில் அதிதியாக கலந்து கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவரது பாரியார் மைத்திரி விக்கிரமசிங்க, அமைச்சர் சுவாமிநாதன் ஆகியோர் தமிழ் பாரம்பரியங்களோடு வரவேற்கப்படுவதைப் படத்தில் காணலாம்.

அலரி மாளிகையில் தேசிய தீபாவளி

Read More


மலைநாட்டு பிரதேசத்தில் மழை வீழ்ச்சி குறைவடைந்ததை தொடர்ந்து புத்தளம் மாவட்டத்தில் இதுவரை திறந்து வைக்கப்பட்டிருந்த பல நீர்த்தேக்கங்களின் அவசர கதவுகள் மூடப்பட்டிருக்கின்றன.

நேற்று மாலை ராஜாங்கணை நீர்த்தேக்கத்தின் அனைத்து அவசர கதவுகளும் மூடப்பட்டுவிட்டதாக
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அதை தொடர்ந்து கலா வாவியின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளது.

நீரில் மூழ்கியிருந்த புத்தளம் - மன்னார் வீதியின் போக்குவரத்து வழமைக்கு  திரும்பியுள்ளது.

நீர்த்தேக்கங்களின் அவசர கதவுகள் மூடப்பட்டிருக்கின்றன

Read Moreஜனாதிபதி, பிரதமர் சூசகப் பேச்சு

எவன் கார்ட் விவகாரம் குறித்து பிரதமருடன் கலந்தாலோசித்து அரசாங்கம் எடுக்க இருக்கும் நடவடிக்கை குறித்து ஒரு வார காலத்தில் அமைச்சரவைக்கு அறிவிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.

எவன் கார்ட் சர்ச்சை தொடர்பாக ஆராய்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்றுக் காலை விசேட அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதன்போதே ஜனாதிபதி இது குறித்து தெரிவித்துள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த விசேட அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் உட்பட அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்ட போதும் சட்டம் ஒழுங்கு அமைச்சர் திலக் மாரப்பன இதில் பங்கேற்கவில்லை.

திலக் மாரப்பனவின் இராஜினாமா குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவைக்கு அறிவித்தார். தனக்கு அமைச்சரின் இராஜினாமா கடிதம் கிடைத்துள்ளதாக அவர் இங்கு குறிப்பிட் டுள்ளார். ஆனால் அமைச்சர் மாரப்பன பதவி விலக வேண்டும் என நேற்று நடந்த விசேட அமைச்சரவை கூட்டத்தில் அழுத்தம் வழங்க சில அமைச்சர்கள் ஏற்கெனவே திட்டமிட்டிருந்ததாகவும் அறிய வருகிறது.

கடந்த ஆட்சியில் எவன் கார்ட் நிறுவனத்துடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த நிலையில் எதிர்க் கட்சியினர் இந்த விவகாரத்தில் ஆதரவு வழங்கி வருவது குறித்து ஜனாதிபதி அமைச்சரவைக்கு எடுத்துரைத்துள்ளார். இது அரசாங்க உறுப்பினர்கள் சார்ந்த விவகாரம் என்பதால் இதனை அரசாங்கத்திற்குள்ளேயே தீர்க்க வேண்டும் எனவும் அவர் அமைச்சரவைக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

எவன் கார்ட் விவகாரத்தில் அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ மீதும் குற்றஞ்சாட்டப்படும் நிலையில், சட்ட மா அதிபரின் நிலைப்பாட்டிற்கமையவே தான் கருத்துக் கூறிவருவதாக அவர் அமைச்சரவையில் குறிப்பிட்டுள்ளார். அரசியல்வாதிகளின் குற்றச்சாட்டுக்களின் படி அன்றி ஆதாரங்களின் அடிப்படையிலேயே சட்டமா அதிபர் செயற்படுவதாக குறிப்பிட்டுள்ள அவர் தான் எவன் கார்ட் நிறுவனத்தை நியாயப்படுத்த ஒருபோதும் முயலவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் எவன் கார்ட் விசாரணை தொடர்பில் முக்கிய அமைச்சர் ஒருவர் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அழுத்தம் கொடுத்ததாக குற்றஞ்சாட்டியுள்ள அமைச்சர் ராஜித சேனாரத்ன சிரேஷ்ட சட்டமா அதிபர் திணைக்கள உயரதிகாரிகள் சிலர் குறித்தும் அமைச்சரவையில் வெளிப்படுத்தியுள்ளார். இதன்போது அவர்களின் பெயர் விபரங்களை வெளியிடுமாறு அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாகவும் அறிய வருகிறது.

இதேவேளை எவன் கார்ட் நிறுவனம் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலானது எனவும் அரசாங்கம் முழுமையான விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.

இதேவேளை, எவன் கார்ட் விவகாரம் குறித்து இதனுடன் தொடர்புள்ள சகல தரப்பினர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் ஆகியோரை அழைத்துப் பேசவும் அமைச்சரவையில் முடிவுசெய்யப்பட்டுள்ளது.

கடந்த வார அமைச்சரவை கூட்டம் எவன் கார்ட் விவகாரத்தினால் சூடு பிடித்ததோடு காரசாரமான விவாதங்கள் இடம்பெற்றன.

பல தரப்பினரும் எவன் கார்ட் விவகாரம் குறித்து குற்றஞ்சாட்டி வரும் நிலையிலே விசேட அமைச்சரவை கூட்டமொன்றை நடத்தி இதுகுறித்து ஆராய ஜனாதிபதி முடிவு செய்தார்.

அரசின் அடுத்த கட்டம் என்ன?

Read Moreஇலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.

30 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.

கண்டி பல்லேகல மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 3 விக்கட்டுக்களை இழந்து 215 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பாக தில்ஷான் 56 ஓட்டங்களையும், குசல் ஜனித் பெரேரா 40 ஓட்டங்களையும், சந்திமால் 40 ஓட்டங்களையும், மெத்தியூஸ் 37 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

216 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 19.5 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 185 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி சார்பாக ப்லச்சர் 57 ஓட்டங்களையும், பொல்லார்ட் 26 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் இலங்கை சார்பாக சச்சித்ர சேனாநாயக்க 4 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.

முதலாவது போட்டியில் இலங்கை வெற்றி

Read More


சட்ட மற்றும் ஒழுங்குகள் அமைச்சராக இருந்த திலக் மாரப்பன அந்த பதவியில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் அந்த பதவி சாகல ரத்னாயக்கவுக்கு வழங்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது. 

சாகல ரத்நாயக்க – தென் மகாண அபிவிருத்தி அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது.

சட்ட மற்றும் ஒழுங்குகள் அமைச்சுப் பதவி சாகலவுக்கு

Read More


அவன் காட் உள்ளிட்ட பாரிய ஊழல் மோசடிகள் குறித்தான விசாரணை நடவடிக்கைகளை தான் எடுத்துக் கொள்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இன்று (09) இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்ததாக அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன ஊடவியலாளரிடம் தெரிவித்தார்.

இது குறித்த விசாரணைகளை நடாத்துவதற்கு, பாதுகாப்பு பிரிவு, சட்டம் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் ஆர்வமுடைய அமைச்சர்கள் சிலருடன் இணைந்து செயற்படுவதற்கான கலந்துரையாடலில்  ஜனாதி ஈடுபடவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலின் பின்னர், இது குறித்தான மேலதிக விடயங்கள் குறித்து முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

-Thinkaran.lk

அவன் காட் உள்ளிட்ட விசாரணைகள் ஜனாதிபதியின் கீழ்

Read More


குமார் குணரட்னம் தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸவிடம் விசாரணை நடத்துமாறு ஜே.வி.பி கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

2012ம் ஆண்டு முன்னிலை சோசலிச கட்சியின் தலைவர் குமார் குணரட்னம் கடத்தப்பட்ட சம்பவம் குறித்துஇ கோதபாய ராஜபக்ஸவிடம் விசாரணை நடத்தப்பட வேண்டுமென அவர் கோரியுள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

குமார் குணரட்னத்தை கைது செய்து நாடு கடத்துமாறு அனுரகுமார திஸாநாயக்க கோரியிருந்தார் என அண்மையில் வார இறுதி பத்திரிகையொன்றுக்கு கோதபாய ராஜபக்ஸ தெரிவித்திருந்தார்.

இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் அனுரகுமார திஸாநாயக்க கோதபாயவை விசாரணைக்கு உட்படுத்துமாறு கோரியுள்ளார்.


குமார் குணரட்னம் பற்றி கோதாவிடம் விசாரணை நடத்தவும்

Read Moreஎவன்காட் விடயம் தொடர்பில் அதனுடன் தொடர்புடைய பாதுகாப்பு பிரிவு உட்பட அனைத்து தரப்பினரும் ஒன்று கூடி கலந்துறையாடல் ஒன்றை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறினார்.

எவன்காட் விடயம் தொடர்பில் இன்று காலை ஜனாதிபதி தலைமையில் விஷேட கலந்துறையாடல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

எவன்காட் விடயம் தொடர்பில் அனைத்து தரப்பினது கலந்துறையாடல்

Read More


இலங்கையில் கைது செய்யப்பட்டிருந்த 126 இந்திய மீனவர்களையும் இன்று (09) விடுதலை செய்யவுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவித்துள்ளார்.

தீபாவளி பண்டிகையை (10) முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்படுபவர்களில் பெரும்பாலானோர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதோடு, தமது மீனவர்களை விடுதலை செய்யுமாறு தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் பல தடவை இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும், இரு நாடுகளினதும் வெளிவிவகாரம் மற்றும் மீன்பிடி அமைச்சுகளுக்கிடையே ஏற்படுத்ப்பட்ட உடன்பாட்டின் அடிப்படையில் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் கைதான 36 இலங்கை மீனவர்களும் விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


-Thinakaran.lk

தீபாவளியை முன்னிட்டு இருநாட்டு மீனவர்களும் விடுதலை

Read More

© 2014 - 2015 Info Sri Lanka News| - Everywhere for You |Info Sri Lanka News Network | An INSEL Holdings Group Company | Designed and Developed By INSEL
Scroll To Top