இன்று வரவுசெலவுத் திட்டம்பிற்பகல் 2 மணிக்கு நிதியமைச்சரினால் சபையில் சமர்ப்பிப்பு

எட்டாவது பாராளுமன்றத்தின் முதலாவது வரவுசெலவுத்திட்டம் இன்று பிற்பகல் 2 மணிக்கு நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க வினால் பாராளுமன்றத்தில் சமர்க்கப்படு கிறது. ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்த நல்லாட்சி அரசாங்கத்தின் இந்த முதலாவது வரவுசெலவுத்திட்டம் குறித்து ஒருபோது மில்லாத அளவு மக்கள் பாரிய எதிர்பார்ப் புகளுடன் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு புதியதொரு ஆரம்பமாக அமையவிருக்கும் இந்த வரவுசெலவுத்திட்டத்தில், மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைப்பது மற்றும் நாட்டின் அபிவிருத்தி ஆகிய இரண்டு முக்கிய விடயங்கள் கூடுதல் கவனம் செலுத்தப் பட்டிருப்பதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

வரவுசெலவுத்திட்டம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, சர்வதேச வர்த்தக விவகார அமைச்சர் மலிக் சமரவிக்ரம, நிதியமைச்சின் செயலாளர், மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜூனா மகேந்திரன் ஆகியோர் கலந்துரையாடி யிருந்தனர்.

வரவுசெலவுத்திட்டத்தை அனுமதிப்பது தொடர்பான விசேட அமைச்சரவைக் கூட்டம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு ஜனாதிபதி தலைமையில் நடைபெற விருப்பதாக அமைச்சரவையின் இணைப் பேச்சாளர் அமைச்சர் கயந்த கருணாதிலக கூறினார்.

புதிய அரசாங்கத்தால் இன்று சமர்ப்பிக் கப்படும் வரவுசெலவுத்திட்டம் கடந்தகாலத்தில் பாதிக்கப்பட்ட மக் களுக்கு 75 வீதம் முதல் 80 வீதம் வரையான நிவாரணங்களை வழங்கு வதாக அமைவதுடன், கடந்த கால வரவுசெலவுத் திட்டங்களைவிட 5 மடங்கு அதிகமான நிவாரணங்களை மக்களுக்கு வழங்குவதாக அமையும் என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

இவ்வரவுசெலவுத்திட்டம் தமக்கான வரவுசெலவுத்திட்டம் என்பதை ஒவ்வொருவரும் உணரும் வகையில் இருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டி யுள்ளார்.

2016 வரவுசெலவுத்திட்டத்தில் அரசாங் கத்தின் மொத்த செலவீனம் 3,138 பில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ள தோடு அரச வருமானம் 1,941 பில்லியன் களாக அமையும் என எதிர்பார்க்க ப்படுகிறது.

இது தொடர்பான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் அமைச்சரவையின் அங்கீ காரத்தின் பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் பட்டது.

அத்தியாவசியப் பொருட்கள் பத்தின் விலைகள் குறைக்கவும், வறிய மக்களை பாதிக்காத வகையில் வரி அறவீடுகளை மேற்கொள்ளவும் உத்தேசிக்கப்பட் டுள்ளது.

அத்துடன் மூலதனத்தை அடிப்ப டையாகக் கொண்டதாகவும், செலவீனத் தைவிட வருமானத்தை அதிகமாகக் கொண்டதாகவும் இம்முறை வரவு செலவுத்திட்டம் அமையும் என நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

துண்டு விழும் தொகையை 6.8 வீதமாக மட்டுப்படுத்தவும், 2017ல் இதனை 6.2 வீதமாகவும் 2020ல் 3.2 ஆகவும் குறைக்க அரசாங்கம் உத்திதேசித் துள்ளது. இம்முறை வரவுசெலவுத்திட்டம் 2016 - 2018 இடைக்காலத்தை அடிப்படை யாகக் கொண்டதாகவே அமைய உள்ளதோடு இதில் கல்வி மற்றும் சுகாதார அமைச்சுக் களுக்கு வழமை யைவிட கூடுதல் நிதி ஒதுக்கப்பட் டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சிற்கு 306.6 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதோடு கல்வி அமைச்சிற்கு 185.9 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இது 2015 நிதி ஒதுக்கீட்டைவிட 4 மடங்கு அதிக மாகும்.

சுகாதார அமைச்சிற்கு 3174 பில்லியன் ரூபாவும், பல்கலைக்கழக கல்வி மற்றும் நெடுஞ்சாலை அமைச்சிற்கு 171 பில்லியன் ரூபாவும் நிதி திட்டமிடல் அமைச்சிற்கு 107 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட் டுள்ளது.

புதிய அரசாங்கத்தின் மத்திய இடைக்கால பொருளாதார கொள்கை பிரகடனம் கடந்த 5ஆம் திகதி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிடப்பட்டது. இதனை அடிப்படையாகக் கொண்ட தாகவே 2016 வரவுசெலவுத்திட்டம் தயாரிக்கப் பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சிம்மாசன உரையை அடிப்படையாகக் கொண்டதாகவும் பிரதமரின் உரை இடம்பெற்றிருந்தது.

இம்முறை வரவுசெலவுத்திட்டத்தில் சுதந்திரக் கட்சியின் யோசனைகளும் உள்வாழ்கப்பட்டுள்ளதாக விசேட செயற்றிட்ட அமைச்சர் கலாநிதி சரத் அனுமுகம தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் யோசனைக்கு அமையவே கடந்த இடைக்கால வரவுசெலவுத் திட்டத் தினூடாக வழங்கப்பட்ட நிவாரணங்களை இம்முறையும் வழங்க திட்டமிடப்பட்டுள்ள தாகவும் அவர் குறிப்பிட்டார்.

சகல தரப்பினரையும் திருப்திப் படுத்தும் வகையில் 2016 வரவுசெலவுத் திட்டம் அமையும் என எதிர்பார்க்கப் படுகிறது.

வரவுசெலவுத்திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் நாளை முதல் ஆரம்பமாகிறது.

நாளை ஆரம் பிக்கும் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் எதிர் வரும் 2ஆம் திகதிவரை நடைபெற்று டிசம்பர் 2ஆம் திகதி விவாதம் நடத் தப்படும்.

பின்னர் மூன்றாம் திகதி முதல் 19ஆம் திகதிவரை குழுநிலை விவாதம் நடைபெற்று 19ஆம் திகதி இறுதி வாக்கெடுப்பு நடத்தப்படும்.

எம்.எஸ்.பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்

© 2014 - 2015 Info Sri Lanka News| - Everywhere for You |Info Sri Lanka News Network | An INSEL Holdings Group Company | Designed and Developed By INSEL
Scroll To Top