தீபாவளியை முன்னிட்டு இருநாட்டு மீனவர்களும் விடுதலை


இலங்கையில் கைது செய்யப்பட்டிருந்த 126 இந்திய மீனவர்களையும் இன்று (09) விடுதலை செய்யவுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவித்துள்ளார்.

தீபாவளி பண்டிகையை (10) முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்படுபவர்களில் பெரும்பாலானோர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதோடு, தமது மீனவர்களை விடுதலை செய்யுமாறு தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் பல தடவை இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும், இரு நாடுகளினதும் வெளிவிவகாரம் மற்றும் மீன்பிடி அமைச்சுகளுக்கிடையே ஏற்படுத்ப்பட்ட உடன்பாட்டின் அடிப்படையில் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் கைதான 36 இலங்கை மீனவர்களும் விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


-Thinakaran.lk
© 2014 - 2015 Info Sri Lanka News| - Everywhere for You |Info Sri Lanka News Network | An INSEL Holdings Group Company | Designed and Developed By INSEL
Scroll To Top