சமந்தாவின் ரோல்மொடல் ரேவதிநடிகை சமந்தா தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். விக்ரமுடன் நடித்த '10 எண்றதுக்குள்ள' படம் சமீபத்தில் வெளியானது. சு+ர்யாவுடன் '24' என்ற படத்திலும், தனுஷ் ஜோடியாக 'தங்க மகன்' என்ற படத்திலும் தற்போது நடித்துக்கொண்டு இருக்கிறார்.

விஜய்யின் 59-வது படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்துக்கொண்டு இருக்கிறார். மேலும் 4 படங்கள் கைவசம் உள்ளன. கஷ்டப்பட்டு இந்த நிலைமைக்கு உயர்ந்து இருப்பதாக சமந்தா கூறினார்.

இது குறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:- நடிகையாக வேண்டும் என்று ஆசைப்பட்டு சினிமாவுக்கு வந்த புதிதில் வாய்ப்பு தேடி அலைந்தேன். பட கம்பெனிகளில் ஏறி இறங்கினேன். பல டைரக்டர்கள் என்னுடைய நடிப்பாற்றல், கேமராவில் எனது தோற்றம் போன்றவற்றை சோதித்து பார்த்தனர். இறுதியில் நடிப்பு வரவில்லை என்று ஒதுக்கினார்கள். இது எனக்கு மனவருத்ததை ஏற்படுத்தியது.

சிலர் என்னிடம் ரேவதி போல் நடிப்பது உன் தோற்றத்துக்கு பொருத்தமாக இருக்கும் என்றனர். இதனால் ரேவதி நடித்த பழைய படங்களின் சி.டி.க்களை வாங்கிப்போய் வீட்டில் போட்டு பார்த்தேன். சிறு வயதில் இருந்தே எனக்கு ரேவதியை பிடிக்கும். எனவே அவர் எப்படி நடித்து இருக்கிறார் என்பதை சி.டி.க்களை பார்த்து உள்வாங்கி அதுமாதிரி நடித்து பயிற்சி எடுத்தேன்.

கண்ணாடி முன்னால் நின்று ரேவதி போல் நடித்தும், பேசியும் பழகினேன். அதன் பிறகு சினிமா வாய்ப்பு கிடைத்தது. இப்போது எனக்கு என்று தனி பாணியை வகுத்து நடித்து வருகிறேன். சமீபத்தில் விளம்பர படமொன்றில் ரேவதியுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிட்டியது.

மிகவும் சந்தோ'ப்பட்டேன். ஒவ்வொரு நடிகையும் இவரைப்போல் வரவேண்டும் என்று ஒரு நடிகையை முன்மாதிரியாக எடுத்துக்கொள்வார்கள். என் சினிமா வாழ்க்கையில் முன்மாதிரியாக இருப்பவர் ரேவதிதான் என்றார்.

© 2014 - 2015 Info Sri Lanka News| - Everywhere for You |Info Sri Lanka News Network | An INSEL Holdings Group Company | Designed and Developed By INSEL
Scroll To Top